வவுனியா – ஒமந்தை ஏ9 வீதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் 24 பேர் காயமடைந்துள்ளனர்.
ஆடைத்தொழிற்சாலைக்கு ஊழியர்களை எற்றி வந்த பேருந்து பால் பவுசருடன் மோதி விபத்துக்குள்ளானதில் 24 பேர் காயமடைந்துள்ளனர்.
ஆடைத் தொழிற்சாலைக்கு பணியாளர்களை ஏற்றி வந்த பேரூந்து ஓமந்தை பன்றிக்கெய்த குளம் பகுதியில் வைத்து, எதிர் திசையில் வந்த பால் பவுசருடன் மோதி விபத்துக்குள்ளானது.
சம்பவத்தில் காயமடைந்த பேரூந்தில் பயணித்த 24 பேர் வவுனியா வைத்தியசாலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஓமந்தை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.