நாட்டின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

315 0

நாட்டை அண்மித்த வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள குழப்பநிலை காரணமாக இன்று பிற்பகல் 2 மணிக்கு பின்னர் பெரும்பாலான பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக ஊவா மாகாணம் உள்ளிட்ட பல மாகாணங்களில் 150 மில்லிமீட்டருக்கும் அதிகமாக மழை பெய்யும் என்று காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

அத்துடன் சப்ரகமுவ, மத்திய, வடமத்திய மற்றும் வடக்கு மாகாணங்களின் சில இடங்களில் 100 மில்லிமீட்டர் மழை பெய்யும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

மேலும், திருகோணமலை தொடக்கம் கங்கேசன்துறை ஊடாக புத்தளம் வரையான கடல் பிரதேசத்தில் இடைக்கிடையில் இடியுடன் கூடிய மழையுடன்; அதிக காற்றும் வீசும் எனவும் கடல் கொந்தளிப்பாக காணப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a comment