அம்பாறை மாவட்டத்தில் சாய்ந்தமருது பகுதிக்கு பிரத்தியேக பிரதேச சபை ஒன்றை வழங்கக் கோரி, அந்த பிரதேச மக்களால் நிர்வாகமுடக்கல் போராட்டம் நடத்தப்படுகிறது.
தொடர்ந்து மூன்று தினங்களுக்கு இந்த போராட்டம் நடத்தப்படும் என்று, சாய்ந்த மருது ஜும்மா பள்ளிவாசல் அறிவித்துள்ளது.
ஆர்ப்பாட்டத்தின் காரணமாக சாய்ந்தமருது நகரில் பல்வேறு வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளன.
எனினும் வாகன போக்குவரத்து வழமைப் போல் இடம்பெறுவதாக அங்குள்ள எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தோட்ட நிர்வாகத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பதுளை – மடுல்சீமை – வெரபலத்தனை பகுதி மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தி வருகின்றனர்.