ஈ.பி.டி.பியின் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவாநந்தா மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது.
1998ம் ஆண்டு இடம்பெற்ற இந்த சம்பவம் குறித்த வழக்கு விசாரணை கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்று வந்தது.
வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட ஆறு பேருக்கு பத்தரை ஆண்டுகால கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டிருந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தின் செயற்பட்டாளர் எமில்காந்தன் உள்ளிட்ட 9 பேர் குற்றமற்றவர்கள் என்று தெரிவித்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
களுத்துறை சிறைச்சாலையில் கடந்த 1998ஆம் ஆண்டு ஜுன் மாதம் 30ம் திகதி, அமைச்சராக இருந்த டக்ளஸ் தேவானந்தாமீது தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.