பிரச்சினை சொற்கள் அல்ல, உள்ளே பாரிய பிரச்சினைகள் உள்ளன- கோட்டாபய

255 0

உத்தேச அரசியலமைப்பு தொடர்பான இடைக்கால அறிக்கையில் சில சொற்கள் மாத்திரமல்ல பிரச்சினைக்குரியது எனவும், இன்னும் பல பாரிய பிரச்சினைக்குரிய அம்சங்கள் உள்ளடங்கப்பட்டுள்ளதாகவும் அவை அனைத்தும் நீக்கப்பட வேண்டும் எனவும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சில தமிழ் மக்களின் சார்பான அரசியல்வாதிகளின் பேச்சுக்களில் உண்மையான பிரச்சினை எதுவென தெளிவாக விளங்க முடியுமாகவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“எளிய” எனும் அமைப்பினால் கண்டியில் ஏற்பாடு செய்யப்பட்ட  நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் இதனைக் கூறியுள்ளார்.

Leave a comment