பொருளாதார வளர்ச்சியை நோக்கி நாடு படிப்படியாக பயணிப்பதாகப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த பொருளாதார வளர்ச்சியினூடாக கடந்த மகிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் பெறப்பட்ட கடன் தொகையை படிப்படியாகச் செலுத்துவதற்கு நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட உள்ளூராட்சிமன்ற தேர்தல் முறை மூலம் எதிர்வரும் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியை மேலும் வலுப்படுத்த வேண்டும் எனத் தெரிவித்தார்.
ரத்மலானை ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளராகப் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர தெரிவு செய்யப்பட்டதை தொடர்ந்து ஏற்பாடுசெய்யப்பட்ட நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.