கொஸ்கொட பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்கு ஐந்து விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது.
அல்பிட்டிய பிரிவுக்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரி நிஹால் தல்துவ தலைமையில் குறித்த குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நேற்று அதிகாலை இடம்பெற்ற மூன்று துப்பாக்கிச்சூட்டில் நான்கு நபர்கள் உயிரிழந்ததுடன் சிறு பிள்ளை ஒன்று காயத்திற்குள்ளானது.
யுத பிடிய, குறுந்தகம்பியச, மெனிக் கம்மான உள்ளிட்ட பிரதேசங்களில் குறித்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் நிகழ்ந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த நான்கு துப்பாக்கிதாரர்களே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர்களின் 13 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவரும் உள்ளடங்குவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் 21, 38, 50, வயதுடைய நபர்களும் குறித்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை, குறித்த சம்பவத்தில் மேலும் ஒரு சிறுவன் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக பலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கொஸ்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.