பதவி நீக்கப்பட்ட பிரதியமைச்சர் துலிப் விஜயசேகர

240 0

பிரதி அமைச்சர் துலிப் விஜயசேகர பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அஞ்சல் சேவைகள் பிரதி அமைச்சர் பதவியில் இருந்தே அவர் நீக்கப்பட்டுள்ளார்.

பதவியில் இருந்து நீக்கப்பட்டமைக்கான கடிதமும் அவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்புரைக்கு அமைய அவர், உடன் அமுலுக்கு வரும் வகையில் பதவி நீக்கம் செய்யப்படுவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, முன்னாளல் பிரதியமைச்சர் துலிப் விஜயசேகர தான் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியில் இணையப்போவதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment