தாம்பரத்தில் வருகிற 8-ந் தேதி மத்திய அரசை கண்டித்து தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட அனைத்துக் கட்சிகளின் மாவட்டத் தலைவர்கள் செயலாளர்கள் கலந்து ஆலோசனை கூட்டம் மறை மலைநகரில் மாவட்ட தி.மு.க. செயலாளர் தா.மோ.அன்பரசன் தலைமையில் நடைபெற் றது.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
மத்திய பா.ஜ.க. அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் ஓராண்டு முடிவுறும் நவம்பர் 8-ந் தேதியை கருப்பு தினமாக அனுசரிப்பதோடு, அன்றையதினம் அனைத்து எதிர்க்கட்சி சார்பில் நாடு தழுவிய போராட்டம் நடத்துவது என்று டெல்லியில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
எனவே தமிழகத்தில் 8-ந் தேதி கருப்பு தினம் அனுசரிப்பதோடு அனைத்து மாவட்டத் தலை நகரங்களிலும் கருப்பு பேட்ஜ் அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துமாறு தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
அதன்படி காஞ்சீபுரம் வடக்கு மாவட்டத்தில் தி.மு.க. உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் சார்பில் வருகிற 8-ந் தேதி தாம்பரம் சண்முகம் சாலையில் காலையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்படுகிறது.
இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் தி.மு.க. தீர்மான குழு உறுப்பினர் வைத்தியலிங்கம், எம்.எல். ஏ.க்கள் தாம்பரம் எஸ்.ஆர்.ராஜா, பல்லாவரம் இ.கருணாநிதி, செங்கல்பட்டு வரலட்சுமி மதுசூதனன், அன்புசெழியன், கலைவாணி, சேகர், ஜெ.சண்முகம், ரூபி மனோகரன், சுந்தரமூர்த்தி, அப்துல் வகாப், தாவூத், தேவஅருள்பிரகாசம், ராஜ்குமார், யாகூப், சலீம்கான், ஷாஜகான், முத்தையன், இளமாறன், வெ.விசுவநாதன் பங்கேற்றனர்.