உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப்: வீனஸ் வில்லிம்ஸை வீழ்த்தி வோஸ்னியாக்கி சாம்பியன்

315 0

உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்சை வீழ்த்தி வோஸ்னியாக்கி சாம்பியன் பட்டம் வென்றார்.

உலக டென்னிஸ் தரவரிசையில் முதல் 8 இடங்களில் இருக்கும் வீராங்கனைகளுக்கு இடையிலான உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடர் சிங்கப்பூரில் நடைபெற்றது.

இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸும், டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கியும் பலப்பரீட்சை நடத்தினார்கள். வீனஸ் வில்லியம்ஸ் 2-வது முறையாக உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வெல்லும் முனைப்போடும், முதன்முறையாக சாம்பியன்ஷிப் பட்டத்தை வெல்ல வேண்டும் என்ற முனைப்போடு வோஸ்னியாக்கியும் களம் இறங்கினார்கள்.

37 வயதாகும் அனுபவம் வாய்ந்த வீனஸ் வில்லியம்ஸால், 27 வயதாகும் வோஸ்னியாக்கியின் ஆட்டத்திற்கு ஈடுகொடுக்க முடியவில்லை. இதனால் வீனஸ் வில்லியம்ஸ் 4-6, 4-6 என நேர்செட் கணக்கில் தோல்வியடைந்தார். வோஸ்னியாக்கி முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

Leave a comment