கனடாவில் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு பொலிஸாரால் அறிவிக்கப்பட்டிருந்த தமிழ் மூதாட்டி ஒருவர் இன்று(30) காலை மீட்கப்பட்டுள்ளார்.
88 வயதுடைய யோகேஸ்வரி யோகலிங்கம் என்ற பெண் நேற்று காலை 6 மணியில் இருந்து காணாமல் போயுள்ளதாக தெரிவித்திருந்த பொலிஸார் இது குறித்து பொதுமக்களிடம் உதவியினைக் கோரியிருந்தனர்.
குறித்த மூதாட்டி Leslie தெரு மற்றும் St. John’s Sideroad பகுதியில் நடை பயிற்சியில் ஈடுபடுவதற்காக சென்றிருந்த நிலையில் வீடு திரும்பவில்லை என உறவினர்கள் தெரிவித்திருந்தனர்.
வசிப்பிட பகுதியில் நேற்றிரவு அவரை தேடும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு இன்று காலை வரையிலும் தொடர்ந்துள்ளது. அங்கு உள்ளவர்களின் வீடுகளில் அவரை தேடி பார்க்குமாறு பொலிஸார் அறிவித்துள்ளதோடு விசாரணைகளுக்கு உதவக்கூடிய தகவல் ஏதாவது இருந்தால் பொலிஸாரை தொடர்பு கொள்ளும்படி பொது மக்களிடம் கேட்டுக் கொண்டனர்.
இந்த நிலையில் அவர் காணாமல் போனதாகக் குறிப்பிடப்பட்ட பகுதியிலுள்ள கட்டடக் கட்டுமானப் பக்கமாக ஒரு மோசமான இடத்திலிருந்து அவரைப் பத்திரமாக மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.