ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மட்டுமே அனைத்து மக்களின் இணக்கத்துடன் இந்த நாட்டின் தேசிய பிரச்சினைக்கு தீர்வொன்றை பெற்றுக்கொடுக்க முடியும் என பேராசிரியர் மெதகொட அபயதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.
பெபிலியான பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனை தெரிவித்தார்.
அனைவரும் சத்தியத்திற்கு துணை நின்று இலங்கையில் அனைத்து மக்களும் அமைதியாக வாழ்வதற்கான சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும்.
இதற்காக பிரிவினைவாதிகளின் எண்ணங்களை ஏற்றுக்கொள்ளத் தேவையில்லை.
அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு நிலைப்பாட்டை ஏற்படுத்த வேண்டும்.
எதிர்க்கட்சியென்றவகையில் அரசாங்கத்தினால் கொண்டுவரப்படுகின்ற அனைத்து சட்டத் திருத்தங்களையும் எதிர்க்கக் கூடாது.
அரசியல் அமைப்பு என்பது தேசிய பிரச்சினையே தவிர கட்சி அரசியல் அல்லவென்பது புரிந்துகொள்ளப்பட வேண்டும் என தேரர் குறிப்பிட்டார்.