அரசாங்கத்தின் தீர்மானம் குறித்து சைட்டம் நிறுவனம் அறிவிக்கவுள்ளது.

600 0
மாலபே சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பில் அரசாங்கம் முன்வைத்துள்ள யோசனை தொடர்பில் சைட்டம் நிறுவனத்தின் நிலைப்பாடு இன்று அறிவிக்கப்பட உள்ளது.
இதுதொடர்பில் கலந்துரையாடும் பொருட்டு சைட்டம் நிறுவனத்தின் உயர் முகாமைத்துவம் கூடி ஆராய்ந்ததன் பின்னர் அது தொடர்பான தீர்மானம் அறிவிக்கப்படவுள்ளது.
எவ்வாறாயினும் அரசாங்கம் முன்வைத்துள்ள யோசனை தமக்கு கிடைக்கப்பெறவில்லை எனவும் அதனை ஊடகங்களில் ஊடாகவே அறிந்துக்கொண்டதாகவும் சைட்டம் நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
சைட்டம் இலாபமீட்டாத நிறுவனமாக அறிவிக்கப்பட்டு அது கலைக்கப்பட வேண்டும் எனவும் அரசாங்கம் நேற்று அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment