அரசியல் அமைப்பு சபை இன்று நாடாளுமன்றத்தில் கூடவுள்ளது.
அரசியல் அமைப்பு சபையின் இடைக்கால அறிக்கை தொடர்பில் இன்றைய தினம் விவாதம் இடம்பெறவுள்ளது.
இன்று தொடக்கம் மூன்று தினங்களுக்கு அது தொடர்பில் விவாதம் இடம்பெறவுள்ளது.
உத்தேச அரசியல் அமைப்பு தொடர்பான அரசியல் அமைப்பு சபையின் இடைக்கால அறிக்கை கடந்த 21ஆம் திகதி பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
இதனிடையே, அரசியல் அமைப்பு சபையின் இடைக்கால அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒன்றிணைந்த எதிர்கட்சி இன்று அடையாள எதிர்ப்பொன்றை வெளியிட தீர்மானித்துள்ளது.
நாடாளுமன்ற நுழைவாயில் பகுதியில் இன்று முற்பகல் 10 மணியளவில் இந்த அடையாள எதிர்ப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக, ஒன்றிணைந்த எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிசிர ஜயகொட தெரிவித்தார்.