நாட்டை பிரிப்பதன் மூலம் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டா பாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
கண்டியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் எதிர்விளைவால் இன்றும் இரு நாடுகளுக்கு இடையில் முறுகல் நிலை காணப்படுகிறது.
இவ்வாறான ஒரு சூழ்நிலைக்கு முகங்கொடுக்கும் நிலையை இலங்கையில் ஏற்படுத்த கூடாது.
இந்த நாட்டில் வாழும் அனைத்து மக்களினதும் சம உரிமையை யாராலும் புறந்தள்ள முடியாது. அதேவேளை, யாருக்கும் அந்த அதிகாரம் இல்லை எனவும் கோட்டாபாய ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.