2009க்கு பின் லாகூரில் இடம்பெறும் முக்கிய போட்டி: களத்தடுப்பில் இலங்கை

328 0
இலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான மூன்றாவது 20க்கு இருபது போட்டி தற்போது லாகூர் மைதானத்தில் இடம்பெற்று வருகிறது.

இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி பாகிஸ்தானை முதலில் துடுப்பெடுத்தாடப் பணித்துள்ளது.

கடந்த 2009ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் செய்திருந்த வேளை, இலங்கை அணி மீது தீவிரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டது.

இதனையடுத்து, லாகூர் மைதானத்தில் விளையாட முக்கிய நாடுகள் எதுவும் தமது அணிகளை அனுப்ப முன்வார நிலையில், பல்வேறு சர்சைகளுக்கு மத்தியில் தற்போது மீண்டும் இலங்கை அணி அங்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment