சகவாழ்வுச் சங்கத்தின் தேசிய மாநாடு நாளை திங்கட்கிழமை நண்பகல் 12.30 மணிக்கு கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நடைபெறவுள்ளது.
யாழ்ப்பாண மாவட்டத்தில் இருந்து 102 பிரதிநிதிகள் இதில் கலந்து கொள்கின்றனர். தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சினால் மாநாடு நடத்தப்படுகின்றது.
அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்கவின் பங்குபற்றலுடன் மாநாடு நடைபெற இருக்கின்றது.
கிராம அலுவலர் பிரிவு வாரியாகச் செயற்படும் சகவாழ்வுச் சங்கங்களின் தலைவர்கள், செயலாளர்கள் மற்றும் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்குப் பிரதிநிதிகளாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
அந்த வகையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் இருந்து 102 பிரதிநிதிகள் மாநாட்டில் கலந்து கொள்வதற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கான போக்குவரத்து வசதிகள் மற்றும் ஏற்பாடுகள் யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தின் ஒழுங்குபடுத்தலின் கீழ் பிரதேச செயலகங்களினால் செய்யப்பட்டுள்ளன.