நாடாளுமன்றத்தை குண்டு வைத்து தகர்க்க வேண்டும் என்று கூறுகின்ற செயற்பாடானது, இலங்கை ஜனநாயகத்தைக் கேள்விக்குறியாக்குகின்ற விடயமாகும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட் கிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் மார்க்கண்டு நடராசா தெரிவித்துள்ளார்.
அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, நாடாளுமன்றத்திற்கு குண்டு தாக்குதல் மேற்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
இதுதொடர்பில் கருத்து வெளியிடும்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
இவ்வாறான கருத்துக்கள் இலங்கை ஜனநாயகத்தை மதியாதன்மையின் உச்சக்கட்ட செயற்பாடாகும்.
இவ்வாறானவர்களின் கருத்துக்களுக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொண்டு அவர்களை கைது செய்ய வேண்டும்.
அத்துடன், அவர்களிடமிருக்கின்ற குண்டுகளைக் கைப்பற்றி செயலிழக்கச் செய்து மக்கள் பிரதிநிதிகளைக் காப்பற்ற வேண்டிய பொறுப்பு பாதுகாப்பு அமைச்சினதும், சட்டம் ஒழுங்கு அமைச்சினதும், செயற்பாடாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.