மக்கள் சக்தி ஆயிரம் வேலைத்திட்டத்தின் கீழ் புதிய பாலம்

447 0

பலாங்கொடை பீல்லகும்புர பகுதி மக்கள் இரண்டு மாதங்களுக்கு முன்னர் ஒரு வேண்டுகோளை மக்கள் சக்தி குழுவினரிடம் முன்வைத்தனர்.

மக்களின் அந்த கோரிக்கை குறுகிய காலத்திற்குள் இன்று நிறைவேற்றப்பட்டது.

இரத்தினபுரி – பலாங்கொடை பிரதேச செயலகத்திற்குட்பட்ட பீல்லகும்புர கிராமத்தில் 300 இற்கும் அதிகமான மக்கள் போக்குவரத்து செய்வதில் மிகுந்த சிரமங்களை எதிர்நோக்கினர்.

இந்த மக்களுக்கு தீர்வைப் பெற்றுக் கொடுக்கும் வகையில் முன்னெடுக்கப்பட்ட திட்டம் இன்று மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டது.

பொல்வத்த, கெசெல்வத்த, தென்னவத்த, ஹேன்யாய மற்றும் பஹன்கந்த ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தற்போது இலகுவாக தமது பயணத்தை முன்னெடுக்க முடிகிறது.

140 அடி நீளமான பாலம் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன், கிராமத்திற்கு செல்வதற்கான புதிய வீதியும் புனரமைக்கப்பட்டுள்ளது.

பிரச்சினையை கண்டறிந்து குறுகிய காலத்திற்குள் அதற்கான தீர்வை, மக்கள் சக்தியினால் வழங்க முடிந்துள்ளது.

செயற்றிட்டத்தை மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வில் பல்வேறு கலையம்சங்களும் இடம்பெற்றன.

மக்கள் சக்தி திட்டத்திற்கு இதன்போது மக்கள் தமது நன்றிகளை தெரிவித்தனர்.

Leave a comment