தகவல் அறியும் சட்டத்தின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சொத்து விவரத்தை வழங்குமாறு தேர்தல் திணைக்களத்திடம் ஊடகவியலாளரால் கோரப்பட்ட விண்ணப்பத்துக்கு அமைய குறித்த விவரங்களை வழங்க முடியாது என தேர்தல்கள் செயலக அதிகாரி பதிலளித்துள்ளார்.
யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தின் கீழ் தற்போது நாடாளுமன்ற உறுப்பினர்களாக உள்ள 7 நாடாளுமன்ற உறுப்பினர்களினதும், வெகுமதி ஆசனத்துக்குரிய ஒரு நாடாளுமன்ற உறுப்பினரதுமான 8 நாடாளுமன்ற உறுப்பினர்களுடைய விவரங்களும் யாழ்ப்பாண மாவட்டச் செயலகம் ஊடாகக் கோரப்பட்டது.
அது யாழ்ப்பாண மாவட்டத் தேர்தல் உத்தியோகத்தர் ஊடாக தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு விண்ணப்பிக்கப்பட்டது.
இவ்வாறு கோரப்பட்ட விவரம் 2016ஆம் ஆண்டின் தகவல் அறியும் சட்டத்தின் 26இல் பிரிவு 2இன் பிரகாரம் தனிமனித விவரம் என்பதன் அடிப்படை யில் வழங்க முடியாது என தேர்தல்கள் ஆணைக் குழு பதிலளித்துள்ளது என தேர்தல்கள் செயலக அதிகாரி தெரிவித்துள்ளார்.