நாட்டின் சில பகுதிகளைச் சேர்ந்த மக்கள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளனர், அதேநேரத்தில் மேலும் சில பகுதிகளில் தொடர்ந்தும் வறட்சி நீடிக்கின்றது.
வறட்சியால் புத்தளம் மாவட்ட விவசாயிகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
முந்தல், மகாகும்புக்கடவல, ஆராச்சிக்கட்டு, பள்ளம, ஆனமடு, கருவலகஸ்வெவ மற்றும் நவகத்தேகம ஆகிய பகுதிகளில் போதிய மழைவீழ்ச்சி கிடைக்காமையினால் வேளான்மை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது
இந்த பகுதிகளில் உள்ள குளங்கள் மற்றும் ஏனைய நீர் நிலைகளில் உள்ள நீர் வற்றிப் போயுள்ளது.
வறட்சியால் பல ஏக்கர் பயிர் நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் கடந்த வருடமும் புத்தளம் மாவட்டத்தில் மழை வீழ்ச்சி கிடைக்காமையினால் விவசாயிகள் பாரிய அளவில் பாதிக்கப்பட்டதுடன் ,அவர்களுக்கு உரிய முறையில் நட்ட ஈடு கிடைக்கவில்லை என குற்றம் சுமத்தப்படுகிறது.
இந்நிலையில் இந்த வருடம் பல விவசாயிகள் விவசாயத்தை கைவிட்டு வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.