கொழும்பு துறைமுக நகரத்துக்கும் கொள்ளுப்பிட்டி ரயில் நிலையத்திற்குமிடையில் சுமார் ஐந்து கிலோ மீட்டர் நீளமான சுரங்கப்பாதையொன்றை அமைக்க அரசாங்கம் திட்ட மிட்டுள்ளது.
இது இந்நாட்டின் முதலாவது நீளமான சுரங்கப்பாதையாக இருக்கும். துறைமுக நகருக்கு அருகிலிருக்கும் சைத்திய வீதியிலிருந்து பழைய பாராளுமன்றம், காலிமுகத்திடல், கோல்பேஸ் ஹோட்டல் ஆகியவற்றின் கீழாக இந்த சுரங்கப் பாதை நிர்மாணிக்கப்படும் என மாநகர மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக ரணவக தெரிவித்துள்ளார்.
கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை பேலியகொடையில் வலது புறமாகவும் இடது புறமாகவும் இடது புறத்தில் வீதித் தூண்களுக்கு மேலாக துறைமுக நுழைவாயில் வழியாக கொழும்பு துறைமுக நகர்வரை வந்து அதிலிருந்து சுரங்கப்பாதை வழியாக கொள்ளுப்பிட்டி ரயில் நிலையத்துக்கு அருகிலுள்ள கரையோர வீதிக்குள் நுழையுமெனவும் அவர் தெரிவித்தார்.