மட்டக்களப்பு, கிரான் பகுதியில் இரண்டு சமூகங்களுக்கிடையே முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதனால், அப்பிரதேசம் பதற்றமாக காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கிரான் பொதுச் சந்தைப் பகுதியில், “இங்கே முஸ்லிம்கள் வியாபாரம் செய்யத் தடை” என்ற பதாகை ஒன்று மின்கம்பத்தில் பொருத்தப்பட்டிருப்பதையடுத்தே இந்த முறுகல் நிலைக்குக் காரணம் எனக் குறிப்பிடப்படுகின்றது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கலகம் அடக்கும் பொலிஸார் அப்பகுதிக்கு வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த வியாழக்கிழமை மட்டக்களப்பு வாழைச்சேனை பஸ் தரிப்பு நிலையத்திற்காக அடிக்கல் நாட்டிய இடத்தில் முஸ்லிம்கள் முச்சக்கரவண்டிகளை நிறுத்தியதை அடுத்து, இரு இனங்களுக்கிடையில் முறுகல் நிலைமை உருவாகிய சூடு தணிவதற்குள், இன்றைய தினம் மீண்டும் இரு இனங்களுக்கிடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.