அம்பகமுவ பிரதேச சபையை மஸ்கெலிய, நோர்ட்வுட் மற்றும் அம்பகமுவ என மூன்றாக பிரிப்பதனால், ஸ்ரீ பாத புனிதப் பிரதேசம் பெரும்பான்மை தமிழர்கள் உள்ள மஸ்கெலிய தொகுதிக்கு செல்வதாகவும் இதற்கெதிராக மூன்று மகாநாயக்கர் பீடங்களும் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யவுள்ளதாகவும் கண்டி முற்போக்கு மக்கள் இயக்கம் தெரிவித்துள்ளது.
அம்பகமுவ பிரதேச சபை உறுப்பினர் ஹெலபிரியனந்தராஜ இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அம்பகமுவ பிரதேசத்திலுள்ள சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் நல்லிணக்கத்துடன் செயற்பட்டு வருவதாகவும் இவ்வாறான பிரதேச சபை பிரிவாக்கத்தினால் நல்லிணக்கத்துக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.