யாழ்ப்பாணம் அரியாலை மணியந்தோட்டம் பகுதியில் கடந்த 22ம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பமவம் தொடர்பான சி.சி.டி. வி காணொளிகளை அடிப்படையாகக் கொண்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
துப்பாக்கிச்சூடு இடம்பெறுவற்கு சிறிது நேரத்திற்கு முன்னர் துப்பாக்கி பிரியோகம் இடம்பெற்ற பகுதியை நோக்கி உயிரிழந்த இளைஞர் செல்வதும் துப்பாக்கிதாரிகளாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றவர்கள் செல்வது போன்ற சீ.சீ.டி.வி காணொளி வெளியாகியுள்ளது.
இந்த காணொளியில் தற்போது குற்றத்தடுப்புப் பிரிவினரின் விசாரணை வலயத்திலுள்ள முச்சக்கரவண்டியில் இரண்டிற்கும் மேற்பட்டவர்கள் செல்வதும் அதற்கும் முன்னதாக துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டிருக்கலாம் என சந்தேகிக்கும் இருவர் மோட்டார் சைக்கிளில் செல்லும் காட்சியும் பதிவாகியுள்ளன.
இதேவேளை, இந்த துப்பாக்கிச் சூடு தொடர்பிலான விசாரணைகள் குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
காவல்துறைமா அதிபர் பூஜித் ஜெயசுந்தரவின் உத்தரவிற்கு அமைய நேற்றைய தினம் இது தொடர்பான விசாரணை குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தலைமையகம் தெரிவித்தது.