வடக்கு மாகாணத்தின் அடுத்த முதலமைச்சராவதற்கு தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவே பெருத்தமானவர் என தமிழ் அரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற தமிழரசுக் கட்சியின் அலுவலக திறப்பு நிகழ்வொன்றில் அவர் இதனை தெரிவித்தார்.
கடந்த மாகாண சபை தேர்தலில் மாவை சேனாதிராஜாவை முதலமைச்சராக நியமிப்பதற்கு அனைத்து தரப்பினரும் விருப்பம் தெரிவித்ததாகவும், எனினும் சிவி விக்னேஸ்வரனின் அரசியல் வருகையுடன் அந்த தீர்மானம் கைவிடப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
முதலமைச்சர் விக்னேஸ்வரனின் ஆட்சிக்காலம் நிறைவடையவுள்ள நிலையில், முதலமைச்சர் பதவிக்கான வேட்பாளராக மாவை சேனாதிராஜா நியமிக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் குறிப்பிட்டுள்ளார்.