18 இலட்சத்தை கொள்ளையிட்டவர்களுக்கு விளக்கமறியல்

322 0

p_court-720x480அம்பலாங்கொட நகரில் கடந்த 22ஆம் திகதி 18 இலட்சம் பணத்தினை கொள்ளையிட்ட இருவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

எதிர்வரும் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பலப்பிட்டிய நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

பெண்ணொருவர் குறித்த பணத்தினை வைப்பிலிடுவதற்கு எடுத்துச்செல்லும் போதே மோட்டார் சைக்கிளில் வந்த இருவர்  பணத்தை கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.

எனினும் அம்பலாங்கொட பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளுக்கு அமைய இரண்டு சந்தேகநபர்களும் கைதுசெய்யப்பட்டு நேற்றைய தினம் பலப்பிட்டிய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தினர்.

இதனையடுத்து அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.