பொதிகளைக் கொண்டு செல்வதற்கான கட்டணம் அதிகரிப்பு

295 0
ரயிலில் பொதிகளைக் கொண்டு செல்வதற்கான கட்டணத்தை, அடுத்த மாத ஆரம்பம் முதல் நூற்றுக்கு 50 வீதமாக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்பொருட்டு அமைச்சரவையின் அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளதாக, ரயில்வே திணைக்களத்தின் வர்த்தக மற்றும் விற்பனை முகாமையாளர் என்.ஜே.இதிபொலகே குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 2008ம் ஆண்டுக்குப் பின்னர், தற்போதே, ரயிலில் பொதிகளைக் கொண்டு செல்வதற்கான கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

எதுஎவ்வாறு இருப்பினும், வர்த்தக நோக்கத்திற்காக கொண்டு செல்லப்படும் பொருட்களுக்கு மட்டுமே இந்த கட்டண அதிகரிப்பு அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும், என்.ஜே.இதிபொலகே சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a comment