அரை மணித்தியாலயத்திற்கு 2500 ரூபாய் – மசாஜ் நிலையம் சுற்றிவளைப்பு

391 0

timthumb.phpமஹரகம-பிலியந்தல வீதியில் மாதம் ஒரு இலட்சம் வாடகை செலுத்தி நடத்தப்பட்டு வந்த மசாஜ் நிலையம் ஒன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அங்கிருந்த 22 வயது தொடக்கம் 36 வயதுகளையுடைய 5 பெண்கள் உள்ளிட்ட அந்த மசாஜ் நிலையத்தின் முகாமையாளரும் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இங்கு செல்வோரிடம் அரை மணித்தியாலயத்திற்கு 2500 ரூபாய் அறவிடப்படுவதாகவும், மசாஜ் நிலையம் என்ற பெயரில் வேறு விடயங்களும் அங்கு இடம்பெற்று வருவதாக முறைபாடுகள் கிடைத்தமைக்கு அமையவே மஹரகம பொலிஸார் நேற்று குறித்த சுற்றிவளைப்பினை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதேவேளை மசாஜ் நிலையம் என்ற பெயரில் வெள்ளவத்தையில் நடத்திச் செல்லப்பட்ட விபச்சார விடுதி ஒன்றும் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது அங்கிருந்த 4 பெண்கள் உள்ளிட்ட முகாமையாரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட பெண்கள் 24,27,30 மற்றும் 33 வயதானவர்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.