அவுஸ்திரேலிய லிபரல் கட்சியின் உபதலைவரும் வௌிவிவகார அமைச்சருமான ஜூலி பிஷப் பதில் பிரதமராக செயற்படவுள்ளார்.
அவுஸ்திரேலிய பிரதமர் Malcolm Turnbull இஸ்ரேலுக்கு விஜயம் செய்யவுள்ள நிலையில்,ஜூலி பிஷப் குறித்த காலப் பகுதியில் பதில் பிரதமராக செயற்படவுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இரட்டை குடியுரிமை கொண்டுள்ள துணை பிரதமர் Barnaby Joyce உள்ளிட்ட நான்கு அரசியல்வாதிகள் தவறாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு உயர் நீதிமன்றம் ஒன்று நேற்று (27) உத்தரவு பிறப்பித்தது.
அவுஸ்திரேலியாவின் அரசியலமைப்புச் சட்டப்படி, இரட்டை குடியுரிமை கொண்டுள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் அவர்கள் தமது பதவிகளில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இடைத்தேர்தல் எதிர்வரும் டிசம்பர் 2 ஆம் திகதி நடத்தப்படவுள்ள நிலையில் ஜூலி பிஷப் துணை பிரதமராக தெரிவு செய்யப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
துணை பிரதமராக தெரிவு செய்யப்படக்கூடிய பல சிரேஷ்ட அரசியல்வாதிகள் போட்டியிட காத்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.