நாளை முதல் சாகும் வரையிலான உணவுதவிர்ப்பு போராட்டம்

262 0

சைட்டம் விவகாரத்திற்கு முடிவு இல்லையெனில் நாளை முதல் சாகும் வரையிலான உணவுதவிர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொள்வதாக அரச பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்களின் பெற்றோர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர்கள் இதனை தெரிவித்தனர்.

சைட்டம் நிறுவனத்தை, மாலபே ஸ்ரீலங்கா தகவல் தொழிநுட்ப நிறுவனத்திடம் ஒப்படைப்பதற்கான யோசனையொன்று அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சைட்டம் நிறுவனத்தை ஸ்ரீலங்கா தகவல் தொழிநுட்ப பிரிவில் இணைத்து அதன் ஒரு பீடமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கு மாலபே தனியார் பல்கலைக்கழக மாணவர்களின் பெற்றோர் அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Leave a comment