ஹல்துமுல்ல, கொஸ்லந்த பிரதேசத்திற்கு கடந்த 6 மணித்தியாலத்துக்குள் பெய்த 125 மி.மி. மழை வீழ்ச்சியினால் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
இதனால், அப்பிரதேசத்திலுள்ள ஆறு குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் நிலையம் மேலும் கூறியுள்ளது.
இந்த அடை மழையினால் அப்பிரதேசங்களின் சுவர்களில் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும், சில இடங்களில் குழிகள் ஏற்பட்டுள்ளதாகவும் அப்பிரதேச செயலாளர் சுனில் அபேகோன் தெரிவித்துள்ளார்.