புதிய அரசியலமைப்பு தயாரிப்பதற்கு மாநாயக்க தேரர்கள் எதிர்ப்பில்லை

260 0

“புதிய அர­சி­ய­ல­மைப்பு தயா­ரிப்­ப­தற்கு மா­நா­யக்க தேரர்கள் எதிர்ப்­பில்லை. ஒரு சில தேரர்கள் கூறிய கருத்­து­க­ளுக்கு மா­நா­யக்­கர்கள் பொறுப்­பில்லை. இது தொடர்பில் மா­நா­யக்க தேரர்­களை  அறி­வு­றுத்­த­வுள்ளோம். அத்­துடன் ஐக்­கிய தேசியக் கட்சி  புதிய அர­சி­ய­ல­மைப்பை கொண்டு வரு­வ­த­னா­லேயே இவர்கள் எதிர்க்­கின்­றனர்” என உயர்­கல்வி மற்றும் நெடுஞ்­சாலை அபி­வி­ருத்தி அமைச்சர் ல­க்ஷ்மன் கிரி­யெல்ல தெரி­வித்தார்.

புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்பில் வின­வி­ய­போதே அமைச்சர் கேச­ரிக்கு மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அமைச்சர் ல­க்ஷ்மன் கிரி­யெல்ல மேலும் குறிப்­பி­டு­கையில்,

“புதிய அர­சி­ய­ல­மைப்பு பணிகள் தயா­ரிக்­கப்­பட்டு வரு­கின்­றன.  எனினும் அர­சி­ய­ல­மைப்­புக்கு மா­நா­யக்க தேரர்கள் எதிர்ப்பு வெளி­யி­டு­வ­தாக கூறு­கின்­றனர். மா­நா­யக்க தேரர்கள் அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்­கு­வ­தற்கு எதிர்ப்­பில்லை. எனினும் இது தொடர்பில் ஏனைய தேரர்கள் வெவ்­வேறு கருத்­து­களை தெரி­விக்­கின்­றனர்.  அதனை ஏற்க முடி­யாது.

அர­சி­ய­ல­மைப்பு பணி­களை நாம் ஒரு­போதும் நிறுத்த போவ­தில்லை. புதிய அர­சி­ய­ல­மைப்பு தயா­ரிப்­ப­தற்கு மா­நா­யக்க தேரர்கள் எதிர்ப்­பில்லை. ஒரு சில பிக்­குகள் கருத்து தெரி­வித்­த­மைக்கு மா­நா­யக்­கர்கள் பொறுப்­பில்லை. இது தொடர்பில் மா­நா­யக்­கர்களை அறி­வு­றுத்­த­வுள்ளோம்.

அத்­துடன் ஐக்­கிய தேசியக் கட்சி புதிய அர­சி­ய­ல­மைப்பை  கொண்டு வரு­வ­தனா­லேயே இவர்கள் எதிர்க்­கின்­றனர். ஐக்­கிய தேசியக் கட்சி இடைக்­கால அறிக்­கையில் யோசனை முன்­வைக்­க­வில்லை என்­பது பிரச்­சி­னை­யல்ல. ஏனெனில் ஐக்­கிய தேசியக் கட்­சியே அர­சி­ய­ல­மைப்பு பணி­களில் முன்­னிலை வகிக்­கின்­றது.

மேலும் மாகாண சபை முறை­மையை ஐக்­கிய தேசிய கட்­சியே  கொண்டு வந்­தது. அத்­துடன் தற்­போ­தைய அர­சி­ய­ல­மைப்பை ஐக்­கிய தேசியக் கட்­சியே கொண்டு வந்­தது. இத­னால்தான்  இவ்­வ­ளவு எதிர்ப்­பினை வெளி­யி­டு­கின்­றனர்.

அதே­போன்று உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­த­லுக்­கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன்பிரகாரம் ஐக்கிய தேசியக் கட்சி தேர்தலுக்கு தயாராக உள்ளது. மேலும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் பெரும்பான்மை வாக்குகளினால் நாம் வெற்றி பெறுவோம் என்றார்.

Leave a comment