வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற் கொண்டு நாளை சீனாவுக்கு பயணமாகின்றார்.
சீன வெளிவிவகார அமைச்சர் வாங்யின் அழைப்பை ஏற்று சீனா செல்லும் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன, 29ஆம் திகதி தொடக்கம் நவம்பர் மாதம் 4ஆம் திகதி வரை சீனாவில் சீன வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து கலந்துரையாடவுள்ளார்.
இது திலக் மாரப்பனவின் சீனாவுக்கான முதலாவது அதிகாரபூர்வ பயணமாகும். அவரது பயணத்துக்கு சீனா முக்கியத்துவம் அளிக்கிறது என்று சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஜெங் சுவாங் நேற்று தெரிவித்துள்ளார்.
சீனத் தலைவர்கள் திலக் மாரப்பனவைச் சந்திக்கவுள்ளனர். இருதரப்பு உறவுகள் ஆரம்பிக்கப்பட்டு 60 ஆண்டுகள் நிறைவடைவதைக் கொண்டாடும் நிகழ்வுகளிலும் அவர் பங்கேற்பார் என்றும் சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.