பாராளுமன்றத்துக்கு இருந்த அதிகாரத்தை இல்லாமலாக்கி பெயரளவிலான பாராளுமன்றமாக மாற்றும் அரசியல் யாப்பை நிறைவேற்ற முற்படும் இப்பாராளுமன்றத்துக்கு ஒரு குண்டு அல்ல 100 குண்டுகள் போடப்பட வேண்டும் என கூட்டு எதிர்க் கட்சி சார்ப்பு பாராளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகமவின் நுகவெல காரியாலயத்தில் இன்று (28) நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
ஏற்கனவே, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச பாராளுமன்றத்துக்கு குண்டு போட வேண்டும் எனக் கூறியமைக்கு விசாரணை நடாத்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.