நல்லாட்சி அரசாங்கத்தின் அனைத்து ஊழல்களையும் வெளிப்படுத்த தமது தரப்பினர் தயாராகவிருப்பதாகவும் தமது ஆட்சி ஏற்பட்டதும் அதற்குரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுமென கூட்டு எதிர்க்கட்சியின் ஆதரவாளரும் அம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நேற்று வெள்ளிக்கிழமை அம்பாந்தோட் டையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
நல்லாட்சி அரசாங்கம் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியே ஆட்சிக்கு வந்தது. ஆனால் தற்போது வரையில் எவற்றையும் நிறைவேற்றுவதாக இல்லை. குறிப்பாக ஊழல் மோசடிகள் தொடர்பில் எம்மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்கள். ஆனால் எவற்றையும் தற்போது வரை நிரூபிக்கவில்லை. ஹெலிகொப்டர், லம்போகினி, சொகுசு வீடுகள் இருக்கின்றன என்றெல்லாம் கூறினார்கள். ஆனால் எவையும் இருக்கவில்லை. அவை அனைத்துமே அரசாங்கத்தின் பொய் குற்றச்சாட்டுக்களாகும்.
நல்லாட்சியை முன்னெடுப்பதாக கூறி ஆட்சியை பெற்றவர்கள் கடந்த இரண்டரை வருடங்களில் பாரிய ஊழலில் ஈடுபட்டார்கள். நாம் அரசாங்கம் அமைத்து ஆட்சிப்பொறுப்பை ஏற் றதும் அவற்றுக்குரிய நட வடிக்கைகளை எடுப் போம். இந்த அரசாங்கம் போன்று இழுத்தடித்துக் கொண்டிருக்காது உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்போம்.
மத்திய வங்கி பிணை முறிகள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் காணப்படுகின்றன. ரஷ்யா உள்ளிட்டவெவ்வேறு நாடுகளிலிருந்து கப்பல்கள், விமானங்கள் இறக்குமதியில் பல்வேறு மோசடிகள் இடம்பெற்றுள்ளன. எங்கள் மீது சுட்டுவிரல் நீட்டும்போது ஏனைய நான்கு விரல்களும் அவர்களையே (அரசாங்கத்தினை) நோக்குகின்றன. எம்மீது தொடர்ச்சியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருபவர்கள் தற்போது அதிவேக நெடுஞ்சாலை விடயத்தில் கோடிக்கணக்கான பண மோசடிகளை மேற்கொண்டுள்ளார்கள். அது குறித்த விபரங்களை நாங்கள் சேகரித்தவண்ணமுள்ளோம்.
விசேடமாக அதிகாரிகளை கவனமாக செயற்பாடுமாறு நான் கேட்டுக்கொள்கின் றேன். காரணம் ஜனாதிபதியின் முன்னாள் செயலாளர் லலித் வீரதுங்கவுக்கு என்ன நடந்தது என்பதை அனைவரும் அறிவீர்கள். எனவே அதிகாரிகள் அவதானமாக செயற் பட வேண்டும் என்றார்.