கதிர்காமம் கோயிலினுள் நடைபெற்ற சம்பவம் குறித்து விசாரணை நடத்த விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
சில வாரங்களுக்கு முன் கதிர்காமம் கோயிலில் காலை தரிசனத்துக்காக பக்தர்கள் காத்திருந்தனர். அப்போது, கோயில் கதவைத் திறப்பதில் கோயில் நிர்வாகத் தரப்புக்கும் ஊழியர் தரப்புக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டது. இதனால் பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
இச்சம்பவம் குறித்து ஆராய்வதற்கு நிலையான அபிவிருத்தி, வனவிலங்குகள் மற்றும் புத்தசாசன அமைச்சர் காமினி ஜயவிக்கிரம பெரேரா விசேட குழுவொன்றை நியமித்துள்ளார்.
ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி பந்துல அத்தபத்து தலைமையிலான இக்குழுவினர், அடுத்த ஒரு மாதத்தினுள் மேற்படி சம்பவம் குறித்து முழுமையான அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளனர்.