கூட்டு எதிர்க் கட்சியிலுள்ளவர்களும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவர்கள் எனவும், எதிர்வரும் தேர்தலில் அவர்களையும் அரவணைத்துக் கொண்டு வெற்றிபெற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளரும் அமைச்சருமாகிய மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
வட்டகொட, மடக்கும்புர பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு இன்று (28) உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.
நாட்டுக்கு ஒவ்வாத அம்சங்களை புதிய அரசியல் யாப்பு சுமந்து வருமாக இருந்தால், அதற்கு எதிராக வாக்களிக்கவும் தாம் தயாராகவுள்ளதாகவும் இவ்வுரையின் போது அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்