வடக்குக் கிழக்கில் வாழும் தமிழ் மக்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதித்துவப்படுத்துவதுபோல், வடக்குக் கிழக்கிற்கு வெளியே வாழும் தமிழ் மக்களை எமது கட்சியான தமிழ் முற்போக்கு கூட்டணி பிரதிநிதித்துவப்படுத்துகின்றது என தேசிய சகவாழ்வு மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
‘வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழர்களை தமிழ் தேசிய கூட்டமைப்பும்இ வடக்கு கிழக்குக்கு வெளியேயான மாகாணங்களில் வாழும் தமிழர்களை தமிழ் முற்போக்கு கூட்டணியும் (பாராளுமன்றத்தில்) பிரதிநிதித்துவம் செய்கின்றன. இவற்றில் கூட்டமைப்புக்கு திரு. சம்பந்தனும்இ கூட்டணிக்கு நானும் தலைமை தாங்குகிறோம்’ எனத் தெரிவித்தார்.