யாழ்ப்பாணத்தில் இயங்கும் பிரபல தனியார் வைத்தியசாலைகளின் சத்திரசிகிச்சைக்கூடம் வடமாகாண சுகாதார அமைச்சர் ஜீ. குணசீலனின் உத்தரவுக்கமைய சீல் வைக்கப்பட்டுள்ளது.
அண்மையில் தனியார் வைத்தியசாலையான நொதேண் தனியார் வைத்தியசாலையில் கட்ராக் எனப்படும் கண்விழித்திரை மாற்றும் அறுவைச்சிகிச்சை மேற்கொண்ட பத்துப்பேருக்கு தொற்று ஏற்பட்டு தற்போது அவர்கள் கொழும்பு அரசினர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனையடுத்து, தனியார் வைத்தியசாலைகளின் சத்திரசிகிச்சைக் கூடங்கள் அனைத்தும் வடமாகாண சுகாதார அதிகாரிகளினால் நேற்று சீல்வைத்து மூடப்பட்டுள்ளது.
இச்சத்திரசிகிச்சைகள் அனைத்தும் வடமாகாணத்தின் கண் சத்திரசிகிச்சை நிபுணர் மலரவனால் மேற்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.