யாழில் இருந்து சென்று கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஐவரில் இருவர் பார்வை இழப்பு!

313 0

யாழ்ப்பாணத்தின் தனியார் வைத்தியசாலையான நொதேண் வைத்தியசாலையில் கண்புரை மாற்றும் சத்திரசிகிச்சை மேற்கொண்ட ஐவர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் ஒருவர் முழுமையாக தனது பார்வையை இழந்துள்ளார்.  இன்னொருவருக்கு எந்த மாற்றமுமில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண் புரை பாதிக்கப்பட்ட பத்துப் பேர் யாழ்ப்பாணம், திருநெல்வேலியிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் கடந்த சனிக்கிழமை சத்திர சிகிச்சை செய்துகொண்டனர். ஐம்பது வயதுக்கு மேற்பட்ட அவர்களில் ஒன்பது பேர் கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

இதையடுத்து யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர்களில் ஐந்து பேர் கொழும்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர். அங்கு கண் மருத்துவ நிபுணரால் மீள கண் சத்திர சிகிச்சை செய்யப்பட்டது.

இவ்வாறு மீள் சிகிச்சை பெற்றுக்கொண்ட ஐவரில் மூவருக்கு மட்டுமே அது முழுப் பயனையும் அளித்துள்ளதாகவும் இருவருக்கு எந்த மாற்றமுமில்லை எனவும் ஒருவரின் கண் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளதால் அவரது கண்ணை அகற்றவேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது என்றும் தெரியவருகிறது.

இதேவேளை, யாழ். போதனா வைத்தியசாலையில் மீள சத்திர சிகிச்சை செய்துகொண்டவர்களில் ஒருவர் மட்டுமே பூரண குணமடைந்ததாகவும் தெரியவந்துள்ளது.

Leave a comment