நாளை முதல் மழையுடன் கூடிய காலநிலை

294 0

நாட்டின் பல பாகங்களிலும் நாளை முதல் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

வங்கால விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக இந்த காலநிலை மாற்றம் ஏற்படக் கூடும் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இந்த காலநிலை மாற்றம் காரணமாக நாட்டின் பல பாகங்களிலும் மாலை நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Leave a comment