கட்டலோனியாவின் தனிநாட்டுப் பிரகடனத்துக்கு இலங்கை கண்டனம்

264 0

கட்டலோனிய பாராளுமன்றத்தினால் ஒருதலைப்பட்சமாக அறிவிக்கப்பட்ட தனிநாட்டுப் பிரகடனத்தை இலங்கை அரசாங்கம் வன்மையாகக் கண்டிப்பதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு இன்று (28) வெளியிட்டுள்ள விசேட அறிவித்தல் மூலம் தெரிவித்துள்ளது.

இலங்கை – ஸ்பெய்ன் ஆகிய நாடுகளுக்கிடையிலான உறவு நீண்டகாலமாக நிலவிவருகின்றது. அத்துடன் ஐரோப்பிய சங்கத்திலும் முக்கிய ஒரு உறுப்பு நாடாக ஸ்பெய்ன் கருதப்படுவதாகவும் வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கை அரசாங்கம் எந்தவித பாகுபாடும் இன்றி ஸ்பெய்ன் அரசின் இறைமையின் இருப்புக்கு ஆதரவைத் தெரிவித்துக் கொள்கின்றது. அத்துடன், கட்டலோனியா ஸ்பெய்னின் முக்கிய ஒரு பிராந்தியமாகவும் கருதப்படுகின்றது எனவும் அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

Leave a comment