பழைய தேசிய அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லையெனவும், அவர் தங்களிடமுள்ள அடையாள அட்டைகளைத் தொடர்ந்தும் பயன்படுத்த முடியும் எனவும் ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
புதிதாக அறிமுகம் செய்த டிஜிட்டல் அடையாள அட்டைகளை அனைவரும் உடனடியாகப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற அவசரத் தேவை இல்லையென ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஆணையாளர் ஜீ.வீ. குணதிலக்க குறிப்பிட்டுள்ளார்.