வடக்கின் அடுத்த முதல்வர் பதவியை அலங்கரிக்கப் போவது யார்?இப்போதைக்கு என்னால் கருத்துக் கூறமுடியாது-இரா

282 0

வடக்கு மாகாண சபையின் அடுத்த முதலமைச்சர் யார் என்பது தொடர்பில் இப்போதைக்கு என்னால் கருத்துக் கூறமுடியாது என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தனது நிலைப்பாட்டினை தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் காங்கேசன்துறை தொகுதிக் கிளை திறப்பு விழாவில் அடுத்த வட மாகாண முதலமைச்சராவதற்கான முழு தகுதியும் மாவை சேனாதிராஜாவிற்கு உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்திருந்தார்.இந்தநிலையில் அதற்கு பதில் அளிக்கும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, வடக்கிற்கான முதலமைச்சர் வேட்பாளராக சிலவேளை தான் போட்டியிடக் கூடிய சூழல் உருவாகலாம் என சுட்டிக்காட்டியிருந்தார்.

இது தொடர்பில் எதிர்க்கட்சி தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனிடம் வினவிய போதே கருத்து கூறமுடியாது என பதில் அளித்து தனது நிலைப்பாட்டினை வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment