வீட்டுக் கிணற்றில் இருந்து இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ள சம்பவம் வவுனியா – உக்கிளாங்குளம் பகுதியில் பதிவாகியுள்ளது.
குறித்த சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளதுடன், உயிரிழந்த இளைஞர் 26 வயதுடைய தியாகலிங்கம் ரகுவரன் என தெரியவருகின்றது.
உக்கிளாங்குளம் இரண்டாம் ஒழுங்கையில் வசிக்கும் வர்த்தகரான இளைஞர் ஒருவர் கடந்த புதன்கிழமை முதல் காணாமல் போயுள்ளார்.
இந்த விவகாரம் குறித்து இளைஞனின் தாயாரால் வவுனியா பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இந்த இளைஞனின் தாயார் தமது வீட்டுக் கிணற்றடியில் அவர் அணியும் செருப்பு இருந்ததை அவதானித்து, கிணற்றைப் பார்த்த போது, இளைஞனின் சடலம் காணப்பட்டுள்ளது
இதனையடுத்தே பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை இச்சம்பவம் குறித்து பண்டாரிக்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.