யாழில் அண்மைக்காலமாக வாள்வெட்டுக் குழுக்களின் அட்டகாசம் தழைத்தோங்கியுள்ளது.
இந்தக் குழுவைக் கட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில் தனிக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
குறித்த குழு நேற்றிலிருந்து தனது பணியை ஆரம்பித்துள்ளதாக இலங்கை காவல்துறையின் யாழ்ப்பாண காவல்துறை அத்தியட்சகர் றொசான் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.
வடக்கில் இடம்பெற்றுவரும் தொடர்ச்சியானகுற்றச் செயல்கள் தொடர்பாக ஊடகம் ஒன்றுக்குப் பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
பத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் ஒன்றிணைக்கப்பட்டு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இக்குழுவானது யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுவரும் வாள்வெட்டுச் சம்பவங்கள், முகமூடிக் கொள்ளைகள், அடாவடிகளில் ஈடுபடுவோர்களைத் தேடிக் கண்டறியும் எனத் தெரிவித்தார்.