கடலட்டை பிடித்தவர்களுக்கு அபராதம்

387 0

court_gavel-450x270யாழ் – மண்டைதீவுக் கடற்பரப்பில் சட்டவிரேதமான முறையில் கடலட்டை பிடித்த இருவருக்கு ஊர்காவற்றுறை நீதிமன்றத்தினால் 25 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் யாழ்.குருநகர் பகுதியினைச் சேர்ந்த இருவர் மண்டைதீவு கடற்பரப்பில் மீண்பிடியில் ஈடுபடுவது போன்ற வெளித்தோற்றத்தினை ஏற்படுத்திக் கொண்டு சட்டவிரோதமான முறையில் கடலட்டை பிடித்துள்ளனர்.
இச் சட்டவிரோதமான செயற்பாடு தொடர்பாக யாழ்.கடற்றொழில் நீரியல்வளத்திணைக்கள அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.
சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் கடலட்டை பிடித்த இருவரையும் கைது செய்துள்ளதுடன், கடலட்டையினையும் கைப்பற்றியுள்ளனர்.
இவர்களுக்கு எதிராக ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கினையும் தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில் குறித்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, இவருரும் மன்றில் குற்றத்தினை ஒப்புக் கொண்டனர்.
இதனையடுத்து இருவரையும் குற்றவாளியாக கருதி தலா 12 ஆயிரத்து 500 ரூபா அபராதம் செலுத்துமாறு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் வை.எம்.எம்.ரியால் உத்தரவிட்டிருந்தார்.