பிரதான காவற்துறை பரிசோதகர்கள் 16 பேர் மற்றும் காவற்துறை பரிசோதகர்கள் 9 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
காவற்துறை தலைமையகம் இதனை தெரிவித்துள்ளது.
காவற்துறைமா அதிபரின் ஆலோசனையின் படி தேசிய காவற்துறை ஆணைக்குழுவின் அனுமதிக்கு அமைய இந்த இடமாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
இதற்கமைய பொறளை, தலைமன்னர், புத்தளம் மற்றும் அலுத்கமை உள்ளிட்ட பிரிவுகளை சேர்ந்த பிரதான காவற்துறை பரிசோதகர்களே இவ்வாறு இடம்பெற்றம் செய்யப்பட்டுள்ளனர்.