சிலாபம் ரயில்வே நிலையம் அருகே நேற்று (26) மாலை வயோதிபர் ஒருவர் புகையிரதம் மோதி உயிரிழந்தார். உயிரிழந்தவர் போமுல்லையைச் சேர்ந்த எச்.ரத்நாயக்க (63) என்று தெரியவந்துள்ளது.
இவரது உடல் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இது விபத்தா, தற்கொலையா என்று விசாரணை நடத்திவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.